குஷ்பூவை கன்னத்தில் அறைந்தது யார்? – சமூக வலைத்தளத்தில் வெளியான போட்டோவால் பரபரப்பு…!!!

நடிகை குஷ்பூ கன்னத்தில் காயத்துடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் நேற்று தன்னை யாரோ அறைந்ததால் 5 விரல் பதிந்ததை போன்ற புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் #SayNoToViolence #StandWithMe #SpeakUpNow ஆகிய ஹேஷ்டேகுகளை பயன்படுத்தியிருந்தால் அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் கமெண்ட்களில் குஷ்பூ அக்காவை அறைந்தது யார் சுந்தர் சி.யா? சொல்லுங்க ஒரு கை பார்க்கலாம் என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். அந்த பதிவில் #meera என்ற ஹேஸ்டேக் உள்ளதால் இது படம் அல்லது டிவி சீரியலுக்கான விளம்பரமாகத் தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *