காஸ்ட்லியான சொகுசு கார் வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா…! அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா, புதிதாக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். சின்னத்திரையில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி ஆகியோர் பைனலுக்கு முன்னேறி உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இதில் கோமாளியாக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன புகழ், பாலா ஆகியோர்

தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக புகழ் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதேபோல் இந்நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன கோமாளிகள் பலரும் அடுத்தடுத்து சொகுசு கார் வாங்கி வருகின்றனர். முன்னதாக புகழ், மணிமேகலை ஆகியோர் பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் 4 சீசன்களாக கோமாளியாக இருந்து வரும் சுனிதா தற்போது புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

கார் வாங்கியபோது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் சுனிதா லெக்ஸஸ் எனகிற நிறுவனத்தின் சொகுசு காரை தான் வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை ரூ.60 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அசாமை சேர்ந்தவரான சுனிதா, ஒரு நடனக்கலைஞர் ஆவார். இவர் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றது மட்டுமின்றி நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *