காசுக்காக சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யா…! புட்டு புட்டு வைக்கும் பிரபலம்…! அதை கேட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

தமிழ் சினிமாவில் பிலே பாய் நடிகராக இருப்பவர் தான் ஆர்யா. இவர் தமிழில் ஓ மனமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிகர் ஆர்யா சினிமாவில் நிறைய நடிகர்கள் வருவார்கள், போவார்கள் ஆனால் சிலரே மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். அப்படி 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாகி இருக்கிறார் ஆர்யா. நாயகனாக நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் அதைவிட நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எல்லா நடிகர்களுடனும் எப்போதும் சகஜமாக பழகக்கூடியவர்.கேரளாவில் பிறந்த இவரது நிஜ பெயர் Jamshad Cethirakath, சினிமாவிற்கு பின் ஆர்யா என மாற்றினார். மலையாளியாக இருந்தாலும் அந்த மொழியில் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். 2010ம் ஆண்டு The Show People என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். சரி இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பார்ப்போம்.

சினிமாவில் நுழைவதற்கு முன் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி இருக்கிறார். இவரது தந்தை கால்பந்து விளையாட்டு வீரர் மற்றும் ரெஸ்டாரன்ட் ஓனராவார்.நடிகர் ஆர்யா Vätternrundan Motala cycle race என சைக்கிள் ரேஸ்களில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கியிருக்கிறார். இவரது தம்தி சத்யா தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகினார், ஆனால் அடுத்தடுத்து நடிக்கவில்லை. இப்படத்தை தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.நான் கடவுள் படத்திற்காக 18 நாட்களில் அகோரி யோகாவை கற்றுக்கொண்டிருக்கிறார். அண்ணா நகரில் Sea Shell என்ற ரெஸ்டாரண்டை வைத்துள்ளார்.நடிகை சயீஷாவை 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்யாவிற்கு 2021ம் வருடம் பெண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் நடிகர் ஆர்யா விலையுயர்ந்த அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்தன.  இந்நிலையில் நடிகர்கள் நடிகைகளை குறித்து பல சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் ஆர்யா பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தொலைக்காட்சியில் பணியாற்றிய ஒரு பெண் ஆர்யாவ காதலித்தார். ஆனால் அவர் அந்த காதலை ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு காரணம் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்தார். சாயிஷா சாதாரண நடிகை அல்ல இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர். சாயிஷா தாய் மற்றும் தந்தை இருவருமே பாலிவுட் பிரபலங்கள். சாயிஷாவை திருமணம் செய்தால் வசதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆர்யா திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *