கல்யாண வீட்டில் கூட்டத்தில் இருந்த பெண்ணுக்கு திடீர் தாலி கட்டிய வாலிபர்.. பார்த்து ஷாக்கான உறவினர்கள்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கமான கொண்டாட்டங்களை எல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து மெகா ஹிட்டான படங்களில் ஒன்று புதுப்பேட்டை. இந்தப்படத்தில் ரவுடியாக வரும் தனுஷ், தன்னோடு ரவுடியாக பயணிக்கும் நண்பரின் , தங்கையின் திருமணத்திற்கு தாலி எடுத்துக்கொடுக்க அழைக்கப்பட்டிருப்பார். ஆனால் சோனியா அகர்வாலின் அழகில் மயங்கி அவர் கழுத்தில் தாலி கட்டிவிடுவார். ஆனால் அதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. வாலிபர் ஒருவர் ஒரு கல்யாண வீட்டிற்கு சென்றிந்தார். அப்போது ஒரு பெண்ணின் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

கல்யாண வீட்டில் அய்யர் கெட்டிமேளம்…கெட்டி மேளம் என சொன்னதும், தன் பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார். அந்தப் பெண்ணும் அதற்கு எதிர்ப்பு காட்டவில்லை. இது அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் நடந்ததா? என்பதும் தெரியவில்லை. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஓசிமேளம்…ஓசி அய்யர் என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ நீங்களே அதைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *