கட்டிபிடிக்கும் போது தெரியாம பட்டிருச்சு…! நடிகையால் டென்ஷனான ஃபகத்…! மாமன்னன் படத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!

திரை உலகில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுபவர் நடிகர் பகத் பாசில். பிரபல இயக்குனரான பாசிலின் மகன் தான் இந்த பகத் பாசில். ஆரம்பத்தில் இவர் நடிக்க வரும்போது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் இப்போது திரையுலகமே கொண்டாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.அதுவும் குறிப்பாக புஷ்பா படத்தின் அவரை அந்த மாதிரி ஒரு கெட்டப்பில் யாருமே எதிர்பார்த்து இருக்க முடியாது. அதைத்தொடர்ந்து விக்ரம் படத்தில் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரள வைத்திருந்தார்.அந்தப் படத்தில் பகத்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரவீனா ரவி.

இவர் ஏற்கனவே லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடித்தவர். மாமன்னன் திரைப்படத்தில் பகத்துக்கும் ரவீனாவுக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார்.ஒரு கட்டிப்பிடிக்கும் காட்சியாம். பகத்தும் ரவீனாவும் கட்டிப்பிடிக்கும் போது தெரியாமல் ரவீனாவின் லிப்ஸ்டிக் பகத்தின் சட்டையில் பட்டுவிட்டதாம். ஆனால் அந்த சமயத்தில் ரவீனா தான் முத்தம் கொடுத்திருக்கிறார் என படப்பிடிப்பில் அனைவரும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்களாம். பகத்துக்கு திருமணம் ஆகவில்லை என்றால்

கூட நான் முத்தம் கொடுத்து இருப்பேன் என ரவீனா ஜாலியாக அந்த பேட்டியில் கூறினார். ஆனால் இந்த லிப்ஸ்டிக் அவர் சட்டையில் பட்டதுமே பகத் மிகவும் டென்ஷனாகி விட்டாராம். ஏனென்றால் அவருக்கு மேக்கப் போடுவது என்பது பிடிக்காதாம். ஏற்கனவே ரவீனாவிடம் நீ மேக்கப் போடுவியா என கேட்டாராம். இவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.ஆனால் இந்த லிப்ஸ்டிக் அவர் சட்டையில் பட்டதுமே பகத் மிகவும் டென்ஷனாகி விட்டாராம். ஏனென்றால் அவருக்கு மேக்கப் போடுவது என்பது பிடிக்காதாம்.

ஏற்கனவே ரவீனாவிடம் நீ மேக்கப் போடுவியா என கேட்டாராம். இவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.லிப்ஸ்டிக் மட்டும் போட்டிருக்கிறாய் என கேட்டாராம். அதற்கு ரவீனா இயல்பாகவே என் உதடு கலர் இப்படித்தான் என முன்பு சொல்லி இருந்தாராம். ஆனால் அந்தக் காட்சியில் நடிக்கும் போது அவர் சட்டையில் பட்ட லிப்ஸ்டிக்கை பார்த்து பகத் ரவீனாவிடம் அப்போ அன்று நீ பொய் தானே சொல்லி இருக்கிறாய் என கொஞ்சம் கடிந்து கொண்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *