கடன் சுமை தாங்க முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பும் சூப்பர் சிங்கர் ஜோடிகள்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமி இருவரும் நிறைய கடன்கள் இருக்கும் காரணத்தினால் சொந்த ஊருக்கே திரும்பப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர்ஸ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபல்யமடைந்தவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. இந்த ஷோவில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தற்போது சினிமாவில் பாடகர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபுதேவா நடிப்பில் வெளியான திரைப்படத்தில்,“ என்ன மச்சான் சொல்லு புள்ள..” என்ற பாடலை இருவரும் பாடியிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்கள். சொந்த ஊருக்கே சென்று விடலாம்.. இந்த நிலையில், ராஜலட்சுமி “License” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்போது அந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமிபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜலட்சுமி, “ எங்களுடைய தொழிலும் வாழ்க்கையிலும் நிறைய சவால்கள் இருக்கின்றது. கணவருடன் பிரச்சினை என்றால் அதனை வெளியில் கொண்டு வருவதை விட அவருடனே பேசி முடிக்க வேண்டும்.

நாங்கள் செட்டிலாகி விட்டோம் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் வரும். ஆனால் அவையாவும் உண்மையல்ல. நாங்கள் கொரோனா காலத்தில் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். வீடு-கார் என எல்லாமே நாங்கள் லோன் போட்டு தான் வாங்கினோம். கடனை அடைப்பதற்கு பணம் இல்லாமல் சென்று விட்டால் இவற்றையெல்லாம் விட்டு விட்டு கிராமத்திற்கே சென்று விடலாம் என என்னுடைய கணவர் கூறுவார்.” என உருக்கமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *