கசாப்பு கடையில் அறுத்து எரிவது போல் என் மார்பகத்தை எடுத்தாச்சு…! 10 நாளில் செத்துடுவ…! பிரபல நடிகை வேதனை…!

அங்காடி தெரு சிந்து தன் உடல்நிலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார். நடிகை சிந்து சின்னத்திரை நடிகையான சிந்துவுக்கு அங்காடி தெரு திரைப்படம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், , “நான் இன்னும் புற்று நோயால் போராடிக் கொண்டே தான் இருக்கிறேன். தினமும் நான் கடவுளிடம் கேட்கும் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. என்னை எடுத்துக் கொள், இல்லை நிம்மதியாக வாழ விடு. நானும் சித்திர வாதம் அனுபவித்துக் கொண்டு, கூட இருப்பவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய ஊசியை எடுத்து மார்பில் குத்தி அதில் இருக்கும் சதையை எடுத்து டெஸ்ட் செய்தார்கள்.

வேதனை அது செய்தது தான் மிகப்பெரிய தவறு. ஒரு வாரத்தில் கட்டிகள் பரவியது. அதிலிருந்து நீர் வந்து வலி ஏற்பட்டது. என் நண்பர் மூலம் ஒரு மருத்துவரை அணுகிப் பார்த்தேன். எடுத்தவுடன் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள். ஆனால் அவர், கசாப்புக் கடையில் அறுத்து எரிவது போல் என் ஒரு மார்பை அறுத்து எடுத்தாச்சு. உறவினர்கள் யாரும் உதவவும் முன் வர மாட்டார்கள். எமர்ஜென்சி சமயத்தில் பணம் வாங்கிவிட்டுத் தர தாமதமானால் அசிங்கப்படுத்துகிறார்கள்.

ஒரு மாதம் முன்பு கூட என் அக்காவின் மகள் சாபம் விட்டாள். இப்போதுதான் கேன்சர் வந்திருக்கு அடுத்தடுத்து பல நோய்கள் வரும், இன்னும் பத்து நாளில் செத்து விடுவாய் என்று எல்லாம் சாபங்கள் வந்தன. இரண்டாவது மார்பு முழுவதும் புற்றுநோய் பரவி விட்டது. விஷால் போன்ற நடிகர்கள் உதவினால் அதையும் அகற்றி விட எனக்கு உதவ முடியும். சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை ” என வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *