ஓசையின்றி பெருஞ்சேவை செய்யும் நடிகர் கவுண்டமணியின் மகள்.. அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? நீங்களும் நிச்சயம் வாழ்த்துவீங்க..!

சேவை செய்வது தான் பெரிய தெய்வ செயல். அதையும் வெளிக்கு வெளி தெரியாமல் ஓசையின்றி செய்து சிலர் அசத்துவார்கள். அப்படி பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள் யாருக்கும் தெரியாமல் செய்து வந்த பெரிய செயல் ஒன்று இப்போதுதான் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கவுண்டணி தன் குடும்பத்தைக் கூட வெளி உலகுக்கு காட்டியது இல்லை. இந்நிலையில் இப்போது எப்படி மகளின் சேவை தெரிந்தது என்கிறீர்களா?

என்னை அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிட்சை பெற்றுவரும் ஆதரவற்ற நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் வந்து ஒரு தம்பதியினர் உதவி இருக்கின்றனர். நீண்டகாலமாக தாங்கள் யார் என்றே வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்த அவர்கள் முதன் முறையாக அதுகுறித்து தெரிவித்தனர். அதுவும் அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டதினால் சொன்னார்கள்.

அப்படி ஒவ்வொரு மாதமும் உதவிவந்த அந்த பெண்ணின் பெயர் சுமித்ரா. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள். அவரும், அவரது கணவர் வெங்கடாச்சலமும் தான் இப்படி ஓசையின்றி பலருக்கு உதவி வருகின்றனர். அடடே நகைச்சுவை நடிகரின் மகள் நிஜத்தில் ஹீரோயின் தான்…நீங்களும் இந்த தம்பதியை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *