என்ன வேணா பண்ணிக்கோங்க நான் அந்த ”சூ” மட்டும் நான் பண்ணதே கிடையாது…! தொகுப்பாளினி டிடி கூறிய உண்மை…!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஆரம்பித்து காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பிரபலமாகி டாப் ஆங்கராகவும் திகழ்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றார். அதபின் டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

டிடி இந்த இடத்திற்கு வர அவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு ஆங்கராக பணியாற்றியதும் ஒரு காரணம். சமீபத்தில் பிரியதர்ஷினியுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், வெளிநாட்டு போய் ஏதாவது வாங்கி செலவு செய்வதால் தான் நான் கிரெடிட் கார்ட் வைத்திருக்கிறேன் என்றும் வேறு எதுக்கும் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தியது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னிக்குமே சூதாடுரவங்க பக்கத்துல உட்கார்ந்தது கிடையாது. அது மாதிரி எதையும் விளம்பரப்படுத்தியது கிடையாது. 50 பைசா வைத்து விளையாடுனதும் கிடையாது. அந்த ரேஸ் அந்த “சூ” மட்டும் பண்ணவே கூடாது, நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க நான் அத பண்ண மாட்டேன். சூதாட்டம் ஆட சொன்னாலும் நீலகண்டன் பொண்ணு விளையாடாது. என்று டிடி கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *