என்னை தனியாக அழைத்து அடிக்கடி ஆடைகளை கழட்ட சொல்வான்…! தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக கூறிய முன்னணி நடிகை…!

அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பாலியல் தொல்லை இருந்து வருகிறது அதிலும் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை கட்டுப்படுத்த குழந்தையாக இருக்கும் பொழுது அவர்களுக்கு குட் டச் பேட் டச் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத் இவர் லாக்கப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார் அதேபோல் இந்த நிகழ்ச்சி 72 நாட்களாக ஒளிபரப்பாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போன்ற ஜெயில் செட்டில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த நிலையில் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்கள் அந்த வகையில் போட்டியாளராக கலந்து கொண்ட முனவர் ஃபருக்கி நான் சிறுவயதில் இருந்தே பாலியல் ரீதியாக துன்புறுத்தளை சந்தித்தேன்.ஆறு வயதில் இந்த பாலியல் தொல்லை ஆரம்பித்தது பதினோரு வயது வரை தொடர்ந்தது அது பற்றி என்னால் அப்பொழுது புரிந்து கொள்ள முடியவில்லை இது குறித்து என்னுடைய குடும்பத்தினருடனும் யாரிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டவர்கள் என்னுடைய உறவினர்கள் தான் என அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

இந்த கதையைக் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் தானும் சிறுவயதில் பாலியல் சீண்டல்கள் எதிர் கொண்டதாக கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் அதுமட்டுமில்லாமல் சிறுவயதில் நான் வசித்து வந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் அங்கே இங்கே என தொடுவான்.அதுமட்டுமில்லாமல் அடிக்கடி என்னை அழைத்து ஆடைகளை கழட்ட சொல்வான் இப்படி அவர் பேசிக் கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு தகவலைக் கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் அந்த பையன் தன்னைவிட 4 வயது தான் மூத்தவன் அப்பொழுது எனக்கு புரியவில்லை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள்

பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் தங்களது குடும்பம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் இதுபோல் சம்பவங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் இது குறித்து யாரும் பொதுவெளியில் பேசியதே கிடையாது சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் எது என பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம் அவ்வாறு சொல்லிக் கொடுப்பதால் தான் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும் என கங்கனா ரனாவத் பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *