என்னாச்சு…! திடீரென நடிகை பாவனி மருத்துவமனையில் அனுமதி…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சின்னத்திரை செயல்களில் நடித்து பிரபலமான பாவனி ரெட்டி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட போது அமீர் என்பவருடன் காதலில் விழுந்தார். அந்த ஷோவுக்கு பிறகு எப்போதும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். சின்னதம்பி சீரியலுக்கு பிறகு ஒரு சில சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் அதுவெல்லாம் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்வதற்கு பாவனிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே பாவனி நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து விட்டதால் பாவனி தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரோடு ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட டான்ஸ் மாஸ்டர் அமீருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அதை பற்றி வெளியே சொல்லாமல் இருந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக அமீரோடு டான்ஸ் ஆடி அதில் டைட்டில் வெற்றி பெற்றதும் தன்னுடைய காதலை இணையத்தில் அனைவருக்கும் தெரிவித்திருந்தார்.

அவர்கள் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக லிவ்இன்-ல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் திருமணத்திற்கு முன்பே ஜோடியாக வெளிநாடுகளுக்கு ஜாலியாக ட்ரிப் சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாவனி ரெட்டி திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். ஹாஸ்பிடலில் கையில் போடப்பட்ட ட்ரிப்ஸ் பேன்டேஜ் உடன் இருக்கும் போட்டோவை பாவனி வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *