நடிகை தன்யா ரவிச்சந்திரன் ‘கருப்பன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். ஆனால் இதற்கு முன்பு நடிகை தன்யா ரவிச்சந்திரன் ‘பலே வெள்ளைய தேவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் தனது முதல் படமே தோல்வி படமாக அமைந்ததால் தோல்வியில் துவண்டு போனார் தன்யா ரவிச்சந்திரன்.பிறகு 2017 ஆம் ஆண்டு ‘பிருந்தாவனம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தனியா. இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் அடுத்தடுத்து தோல்வி படங்களை சந்தித்த தன்யா ரவிச்சந்திரனுக்கு 2019 ஆம் ஆண்டு ‘கருப்பன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதுவரை மாடலிங் உடையில் வலம் வந்த தன்யா ரவிச்சந்திரன் தமிழ்நாட்டு கல்சரில் சேரியுடன் வலம் வந்ததால் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பரவச நிலையை உண்டாக்கியது. தனது அற்புதமான நடிப்பினால் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு கச்சிதமாக இருந்தது.இவருடைய நடிப்பினை பார்த்த தெலுங்கு சினிமா இவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகளை கொடுத்தது. 2021 ஆம் ஆண்டு ‘ராஜா விக்ரமக்ரா’ என்ற திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கு சினிமாவில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் தன்யா ரவிச்சந்திரன்.
இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால். இதுவும் ஒரு வெற்றி படமாக கருதப்பட்டது. மேலும் ‘மாயோன்’ என்ற திரைப்படத்திலும் நடிகர் சிபிராஜுடன் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் தோல்வி படமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்சமயம் ‘அகிலன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார் தன்யா ரவிச்சந்திரன் இந்த படம் மக்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் நல்ல வசூல் சாதனையை பெற்றது.
இந்நிலையில் இவர் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள சமூக வலைதளான இன்ஸ்டாகிராம் போன்ற இணைய பக்கத்தில் தனது புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.