இறந்து போன தந்தை.. மகளுக்குச் சொன்ன கடைசி வார்த்தைகள்.. வீடியோ பாருங்க… உருகிப் போயிடுவீங்க…!

அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண் அவரது தந்தையின் மீது மிகவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

அந்த அப்பா, திடீரென உடல்நலமின்மையால் இறந்து போனார். அவருக்கு ஈமச்சடங்கை அவரது ஒரே மகள் செய்கிறார். அதற்காக நீர் மாலை எனச் சொல்லும் சடங்கினை நிறைவேற்றுகிறார். சாவு வீடுகளில் இசை வாத்தியங்கள் இசைக்கும் ஜே.பி வீரமணி கலைக்குழு அப்பா இல்லாத வலியை வார்த்தைகளில் அப்படியே கண்முன்பு கொண்டுவந்து நிறுத்துகிறார்.

இந்த வரிகளைக் கேட்டதும் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு நிற்கும் தந்தையை இழந்த இளம்பெண் கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறார். இந்தக் காட்சி நம்மையும் அறியாமல் நம் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. குறித்த இந்தக் காட்சியை இணையத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *