தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்ந்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை இசையமைத்து உச்சத்தில் இருப்பவர் தான் இளையராஜா. எவ்வளவு தான் இசைஞானி உச்சத்திற்கு சென்றாலும் ஒருசில செயலால் பலரின் வெறுப்பையும் பகையையும் சேர்த்திருந்தார்.இதனால் இளையராஜாவுக்கு தலைக்கனம், ஆணவம் இருப்பதாக கூறி பல பேட்டிகளில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து வருகிறார். அந்தவகையில் இளையராஜா நடத்திய ஒரு கச்சேரியில்,
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை காற்றே எந்தன் தீபம் பாடலை பாடியிருக்கிறார். அப்போது தேடுதே என்று பாடுவதற்கு பதில் தோடுதே என்று ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். அப்போ ஒரு வார்த்தை சொல்லி அந்த பாடகியை அவமானப்படுத்தியிருக்கிறார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று கூறியிருக்கிறார்.எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை இது. ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காளி.
இந்தி பாடலை பாடுபவர். மேடையில் மொழித் தெரியாமல் பாடுபவர் தவறு செய்தால், ஆங்கிலத்தில் தவறை சுட்டிக்காட்டாமல் கிண்டல் செய்திருக்கிறார். இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் தரம் தாழ்ந்து நடந்து கொண்டார் என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
ஸ்ரேயா கோஷலிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இசைஞானி இளையராஜா !@Vasanthan_James | #ilayaraja | #ShreyaGhoshal pic.twitter.com/uDxEh0NASo
— Kumudam (@kumudamdigi) July 27, 2023