திவ்யா நாகேஷ் நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் அருந்ததி, இந்த திரைப்படத்தில் அவரது திறமையான நடிப்பாலும் மிரட்டலான தோற்றத்தாலும் மிகப் பெரிய ரசிகர் வட்டம உருவானது. இந்த திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவா நடித்தவர்தான் திவ்யா நாகேஷ். இவர் மும்பையில் பிறந்தவர் ஆனால் தன்னுடைய சிறு வயதிலேயே சென்னையில் செட்டிலானர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள்.
ஷாலினி தொடங்கி தெய்வதிருமகள் சாரா வரை நாம் திரையில் பார்த்த குழந்தை நட்சத்திரங்களா இது என்ற அளவிலும் மாறியதை நாம் கண்டிருக்கிறோம். தெலுங்கு மற்றும் தமிழில் விளம்பர படங்களில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் தமிழில் அண்ணியன் திரைப் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அது ஒரு கனாக்காலம், ஜில்லுனு ஒரு காதல் பொய் என்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்,
மேலும் திவ்யா நாகேஷ் தமிழ் தெலுங்கு என 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஆனால் ஹீரோயினாக மட்டும் இதுவரை நடித்ததில்லை. இப்போ எப்படி இருக்கார் பாருங்க அனுஷ்காவின் அருந்ததி திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த இவரின் சமீபத்திய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.