அம்மவை அப்பா தப்பா பேசுனதே இல்லை.. 20 வருசமா மனைவியை பிரிந்துவாழும் ராமராஜன்: நெகிழ்ச்சியோடு மகள் சொன்ன வார்த்தை..!

தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் ரஜினி, கமலுக்கே டப் பைட் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். ஸ்டைலை முன்வைத்து நடிகர் ரஜினியும், தன் நடிப்பு ப்ளஸ் அழகை முன்னிறுத்தி கமலும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஹீரோவுக்கான இமேஜ் என எதுவும் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்த ராமராஜன் அவர்களுக்கே டப்பைட் கொடுத்தார்.

கோயிலில் கரகம் எடுத்து இவர் ஆடும் கரகாட்டக்காரன் படம் மதுரையில் மட்டுமே ஒரு ஆண்டைதாண்டி ஓடியது. அதேபோல் ஹீரோ என்றால் மாஸ் காட்ட வேண்டும் என்ற விதியில் இருந்து விலகி, செண்பகமே…செண்பகமே என பாட்டுப்பாடி மாட்டை அடக்குவது, கலர், கலராய் சட்டைப் போடுவது என படத்துக்கு படம் ராமராஜன் கோமாளி கூத்து காட்டுவார். ஆனால் அன்றைய தலைமுறையினர் அதை மிகவும் ரசித்து பார்த்தனர். நடிகை நளினியை திருமணம் செய்தார். கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்துவிட்டனர்.

அதிமுகவில் எம்.பியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை பார்த்துவிட்டு கட்சியிலும் ஓரம் கட்டினார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் சுயநினைவை இழந்தார் ராமராஜன். சிகிட்சைக்கு பின்பு மிகச்சமீபத்தில் இயல்புநிலைக்கு திரும்பினார் ராமராஜன். 1987ல் திருமணம் செய்த ராமராஜன்_நளினி தம்பதி, 2000வது ஆண்டில் விவாகரத்து பெற்றனர். இந்த தம்பதிக்கு அருணா, அருண் என இருபிள்ளைகள் உள்ளனர். இதில் அருணா தனியார் கம்பெனி ஒன்றில் வக்கீலாக இருந்து சட்டப்படியான் அவர்கள் வழக்கை நிர்வாகம் செய்கிறார்.

அருணா தன் பெற்றோர் குறித்து சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், என் அம்மா கிராமத்துக்காரங்க. அந்த மரியாதையை அவுங்ககிட்ட எதிர்பார்க்கலாம். யாரு வீட்டுக்கு வந்தாலும் எழுந்து வரவேற்று முதலில் தண்ணீர் குடுக்கணும்ன்னு சொல்லுவாங்க. அம்மா, அப்பா பிரியும்போது நாங்க இரண்டு பேரும் ஏழாம்கிளாஸ் படிச்சோம். ஆனா எங்க முன்னாடி இரண்டுபேருமை சண்டையே போட்டதுல்ல.அம்மாவைப்பத்தி அப்பாவோ, அப்பாவைப் பத்தி அம்மாவோ தப்பாவே பேசுனதுல்ல. இரண்டு பேரும் பேசி முடிவெடுத்துத்தான் பிரிச்சாங்க.

விவாகரத்து ஆனப்போ அம்மா கோர்ட்டில் மயங்கி விழுந்துட்டாங்க. அப்பாதான் தூக்கி விட்டாங்க. இதைப்பார்த்த நீதிபதியே, உண்மையாவே டைவர்ஸ் கேட்டுத்தான் வந்தீங்களான்னு கேட்டாராம். அந்த அளவுக்கு பரஸ்பரம் அன்பு உள்ளவங்க..’என நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *