அதை எதிர்பார்க்கவே இல்லை…! ஸ்ரீதேவி அக்கா இறந்தப்போ…! கண் கலங்கிய நடிகை மகேஸ்வரி…!

நடிகை ஸ்ரீதேவி குறித்து மகேஸ்வரி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு என்றும் தனி இடம் உண்டு. தமது அசாத்திய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஸ்ரீதேவி. கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.அதில் சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீதேவி அக்காக்கூட சித்தி, பாட்டி என்று கூட்டுக்குடும்பமாக இருந்தோம். அக்காவுக்கு ஒரே பொழுதுபோக்கு நாங்க தான் ஷூட்டிங் இல்லனா எங்களை கூட்டிக்கொண்டு வெளியில் சென்று விடுவார். அக்கா சென்னை வந்துவிட்டாலே ஸ்கூலுக்கு போக மாட்டோம் அவங்கக்கூடத்தான் எப்போதும் தானும், தம்பியும் இருப்போம்.

நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் மகேஷ்வரி அஜித், விக்ரம் போன்ற இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து நடித்த உல்லாசம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பின், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை மகேஷ்வரிக்கும் சினிமா துறையில் படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியதும் சினிமாவை விட்டு விலகினார். ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீதேவியின் உறவினரும், நடிகையுமான மகேஷ்வரி அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீதேவி அக்காக்கூட சித்தி, பாட்டி என்று கூட்டுக்குடும்பமாக இருந்தோம்.

அக்காவுக்கு ஒரே பொழுதுபோக்கு நாங்க தான் ஷூட்டிங் இல்லனா எங்களை கூட்டிக்கொண்டு வெளியில் சென்று விடுவார். மகேஸ்வரி வேதனை அக்கா சென்னை வந்துவிட்டாலே ஸ்கூலுக்கு போக மாட்டோம் அவங்கக்கூடத்தான் எப்போதும் தானும், தம்பியும் இருப்போம். அதேபோல ஸ்ரீதேவி அக்கா இறந்து விட்டார்கள் என்பதை மனசு இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.அவங்க எங்கோ வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஷூட்டிங்கில் இருக்கிறார்கள் என்று தான் மனசு சொல்லுகிறது. யாருமே எதிர்பார்க்கவே இல்லை இப்படி எங்களை விட்டு திடீர் என்று போய்விடுவார்கள் என்று நினைக்கவே இல்லை. ஆனால், அவர்களின் ஆத்மா எங்களை சுற்றித்தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *