தனுஷை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ் பெயரும் பெற்றிருக்கிறார். வாத்தி டூ கேப்டன் மில்லர் தனுஷ்: தனுஷ் கடைசியாக நடித்து வெளியான படம் வாத்தி. அப்படம் தோல்வியடைந்ததை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். தொடரும் சிக்கல்: அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் கவனம் ஈர்த்த அருண் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிப்பார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து அப்படத்துக்கு சிக்கல் எழுந்துவருகிறது.
இருப்பினும் அவைகளை எல்லாம் தாண்டி படம் வேகமாக வளர்ந்துவருகிறது இப்போது மதுரையில் நடந்துவரும் ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மதுரையில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.தனுஷ் 50: இதற்கிடையே தனுஷுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருக்கிறது. ஏற்கனவே படிக்காதவன், உத்தமபுத்திரன் ஆகிய படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது தனுஷின் படத்தை தயாரிக்கவிருக்கிறது.
இப்படம் தனுஷுக்கு 50ஆவது படமாக உருவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தை தனுஷே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.ஏற்கனவே ராஜ்கிரண் நடிப்பில் பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கி இயக்குநராகவும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனுஷின் கிராஃப் ஒரு பக்கம் இருக்க அவரது நடிப்புக்கென்று ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பெண் ரசிகைகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை ரேகா நாயர் அளித்த சமீபத்திய பேட்டியில், “தமிழ் சினிமாவில் தனுஷைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவரை சந்தித்தபோதுகூட அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். நான் சொன்னதுபோல் அவரிடம் பலரும் சொல்லியிருக்கலாம். எனவே நான் சொன்னதை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்திருப்பேன்” என்றார்.
பயில்வானை பஞ்சராக்கிய ரேகா நாயர்: சின்னத்திரை நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்தார். அப்போது பயில்வான் ரங்கநாதன் ரேகாவைப் பற்றி வாய்க்கு வந்ததை பேசினார். இதனையடுத்து திருவான்மியூர் கடற்கரையில் வைத்து பயில்வானிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பஞ்சராக்கியவர் ரேகா நாயர் என்பது நினைவுகூரத்தக்கது.
திருமணம் சமீபத்தில் அவரை சந்தித்தபோதுகூட அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். நான் சொன்னதுபோல் அவரிடம் பலரும் சொல்லியிருக்கலாம். எனவே நான் சொன்னதை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம்.ஆனால் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்திருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.