அட நம்ம கருணாஸுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா…?? மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்…!! வெளியான அழகிய திருமண வீடியோ இதோ..!!!

இப்போது இருக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலருஎ தன்னுடைய வாரிசுகளுக்கு ரகசியமாகவும் யாருக்கும் சொல்லாமலேயே திருமணத்தை நடத்தி வருகிறார்கள், அந்த வகையில் தற்போது நமது நடிகர் கருணாஸ் தன்னுடைய மகளுக்கு திடீரென திருமணத்தை நடத்தி முடித்துள்ளார், இப்போது இவரது மகள் திருமணத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக மக்கள் பேசப்பட்டு வருகிறார்கள், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கருணாஸின் மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திரை பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் கருணாஸ்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கருணாஸ் தன்னுடைய வாழ்க்கையில் பல திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் தன்னுடைய ஆரம்ப காலத்தை இசை மூலமாக தான் ஆரம்பித்துள்ளார்.இவர் தனது 12 வயதில் கானா பாடகராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் யூகி செய்து நடத்திய நையாண்டி தர்பார் என்கிற நிகழ்ச்சியில் இசை கலைஞராக இருந்தார். 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா என்ற படத்தின் மூலமாக முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் லொடுக்கு பாண்டி என்கிற ரோலில் இவர் நடித்து புகழ்பெற்றார்.

தமிழ் திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் மற்றும் கமல்ஹாசன் ,மற்றும் விக்ரம் மற்றும் சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அது மட்டும் இல்லாமல் தற்போது வரை பல திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான திண்டுக்கல் சாரதி என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளைபுரம், லொடுக்கு பாண்டி போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னர் காமெடியனாகவே தொடர்கிறார்.

நடிகர் கருணாஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு பாடகராக மட்டும் இல்லாமல் தற்போது வரை சுமார் 100 திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் மக்கள் மத்தியில் பிடித்துள்ளார், இப்போது நடிகர் கருணாஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இறுதியாக நடித்த திரைப்படம் என்றால் அது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் தான், இந்த படத்தில் இவர் ஹீரோவிற்கு மாமா கதாபாத்திரத்தில் பிற்போக்கு தனங்கள் நிறைந்த கேரக்டராக நடித்து அசத்தியிருப்பார். இது மட்டும் இல்லாமல் சில படங்களுக்கு அவர் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பல படங்களில் பாடியும் இருக்கிறார். இவருடைய மனைவி கிரேஸ் கருணாஸ் ஒரு பின்னணி பாடகர் ஆவார்.

கருணாஸ் மனைவி கிரேஸ் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பிரபலமான பாடகி ஆவார், இவர் தற்போது வரை பல முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் பல பாடல்களை பாடியுள்ளார், அது மட்டும் இல்லாமல் தற்போது வரை பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு உள்ளார், இந்த நிலையில் கருணாஸின் மூத்த மகள் டயானாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.பெங்களூருவில் வைத்து அந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. சர்ச்சில் வைத்து நடைபெற்ற அந்த திருமணத்திற்கு பிரபலங்கள் யாரையும் அழைக்காமல், சத்தம் இல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் கருணாஸ்.

ஆனால் இப்போது அனைத்து நடிகர்களுமே தன்னுடைய மகள் திருமணத்தை எந்த ஒரு முன்னேர்ப்படும் இல்லாமல் தான் நடத்தி வருகிறார்கள், அந்த வகையில் தற்போது நடிகர் கருணாஸ் தன் மகளுக்கு திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கென் கருணாஸ் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குள் குவிந்து வருகிறது. மேலும் கருணாஸின் ரசிகர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *