அட்ஜெஸ்ட்மெண்டுக்கு yes சொல்லியிருந்தா விஜயுடன் டூயட் பாடியிருப்பேன்…! ச்ச.. எல்லாம் போச்சு என்று வருத்தப்படும் நடிகை …!

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு ஒரு மிகப்பெரும் சவாலாக இருப்பது அட்ஜஸ்ட்மென்ட். அதைத் தாண்டி தான் எத்தனையோ ஹீரோயின்கள் துணை நடிகைகள் தாங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்திருக்கின்றனர். பெரும்பாலும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தால் தான் ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தான் இன்றைய தமிழ் சினிமா உள்ளது. இது சினிமாவில் மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை நடந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். பாலாம்பிகா என்ற அந்த நடிகை ஒரு சில படங்களிலும் பல சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

இவருடைய அப்பா பழம்பெரும் இயக்குனரான கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்தவராம். அதனால் தன் மகளையும் ஒரு நடிகையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் இவருடைய அப்பா. தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக முதன் முதலில் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார் பாலாம்பிகா. அதன் பிறகு பல படங்களில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு வந்ததாம் .ஆனால் அதற்கு என்னுடைய அப்பா நோ சொல்லிவிட்டார் என்று பாலாம்பிகா.

விஜய்க்கு ஜோடியாகவும் பிரசாந்திற்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவர்களுடன் நடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கவே அவருடைய அப்பா அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கவில்லையாம். அதனால் அந்தப் படங்கள் எல்லாம் என்னை விட்டு போய்விட்டது என்று பாலாம்பிகா கூறினார்.ஆனால் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை தவறிவிட்டேனே.

நடித்திருந்தால் என்னுடைய ரேஞ்சே வேற மாதிரி இருக்கும். எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா தான் என ஒரு பேட்டியில் புலம்பினார் பாலாம்பிகா. இதைக் கூறும்போது குறிக்கீட்டு பேசிய நடிகை சகிலா ஒரு வேளை அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதிச்சிருக்கலாமோ என நினைக்கிறியா எனக் கேட்டார்.அதற்கு பாலாம்பிகா “இதுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை எல்லாரும் தான் நடிக்கிறாங்க .என் அப்பா தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் .என்ன செய்வது ?”என புலம்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *