அடேங்கப்பா , மகேஷ் பாபுவின் மகளா இது…! டைம்ஸ் ஸ்கொயரில் மின்னும் சித்தாராவின் விளம்பர வீடியோ…! குவியும் வாழ்த்துக்கள்…!

தெலுங்கு திரையலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ்பாபு. இவர் கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா ஷிரோத்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கௌதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர். மகேஷ் பாபு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாத பொழுதும், அவருடைய மனைவி நம்ரதா மற்றும் மகள் சித்தாரா சமூக வலைதளங்களில் அடிக்கடி பல பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தற்பொழுது விளம்பர மாடலாக தனது கலை பயணத்தை துவங்கி உள்ளார். ஒரு நகை கடைக்கு அவர் மாடலாக போஸ் கொடுத்துள்ளார், இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சித்ரா பதிவிட்டுள்ளார் . இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

சித்தாரா மாடலாக நடித்துள்ள அந்த நகை விளம்பரம் தற்பொழுது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள பிரபலமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நர்மதா அணியும் நகைகளை சித்தாரா சிக்னேச்சர் கலெக்ஷன் என பெயரிட்டு அந்த நகைக்கடை விளம்பரப்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *