அடுத்தடுத்து ஹோட்டல்களை மூடிய நடிகர் கருணாஸ்…! அதற்கு காரணம் இதுதானா…? அவரே உருக்கமாக பேசிய வார்த்தை…! ரசிகர்களை கண்கலங்க செய்தான…!

நடிகர் கருணாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஹோட்டல்களை தான் எதற்காக மூடினேன் என்று விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார்.அதே நேரத்தில் இப்போது அதிகமான திரைப்படங்களில் நடிகர் கருணாஸ் நடிப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார்.இந்த நிலையில் காமெடி நடிகராக வாழ்க்கையை துவங்கிய கருணாஸுக்கு நந்தா திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதற்கு பிறகு காதல் அழிவதில்லை, பாபா, வில்லன், திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் கருணாஸுக்கு நடிகராக திண்டுக்கல் சாரதி போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படங்களில் பாடகராகவும் கலக்கியிருப்பார். இப்படியாக வெற்றி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நடிகர் கருணாஸ் உடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த பல பிரச்சனைகளும் வந்திருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த ஊரில் சில ஹோட்டல்களை தொடங்கிய கர்ணாஸிற்கு வெவ்வேறு விதமாக பிரச்சனைகள் வந்ததால் அதை மூடிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அதாவது நான் சின்ன வயதாக இருக்கும் போது என்னுடைய அப்பா எங்க ஊரில் சின்ன டீக்கடை வைத்திருந்தார்.

அங்கு டீ மட்டுமல்லாமல் புரோட்டா, டிபன் எல்லாமே இருக்கும் அங்கு பலர் வந்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு நல்லா இருக்கு என்று பாராட்டி விட்டு போவார்கள்.அதனால் எனக்கு சிறுவயதில் இருந்தே ஹோட்டல் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் நான் முதன் முதலாக சென்னை 100 அடி ரோட்டில் லொடுக்கு பாண்டி மெஸ் ஆரம்பித்தேன். முதலில் நல்லா தான் போய் கொண்டு இருந்தது. பிறகு அந்த இடத்தை வாடகைக்கு விட்டவரோடு ஏற்பட்ட பிரச்சனையில் காரணமாக அது தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது.அடுத்ததாக இரண்டாவது ஹோட்டலை பெரும்பத்தூரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தில் தொடங்கினேன். அதுவும் ஆட்சி மாற்றம் வந்ததால் எனக்கு இல்லாமல் போய்விட்டது.

அதைத் தொடர்ந்து மூன்றாவதாக கருணாஸின் ரத்தின விலாஸ் என்று ஒரு ஹோட்டல் தொடங்கினேன். அதுவும் கொரோனா காலகட்டத்தில் வருமானம் இல்லாமல் போய்விட்டது. இப்படியாக நான் தொடங்கிய மூன்று ஹோட்டல்களையும் மூடும்படியாகிவிட்டது. இந்த நிலையில் மலேசியாவிற்கு சென்ற இடத்தில் அங்கே ஒரு ஹோட்டலுக்கு பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். ஆனால் அதை நான் நடத்த போவதில்லை. என்னுடைய மனைவியின் பொறுப்பில் விட்டு விட்டேன். என் மனைவி ரொம்பவே பொறுப்பானவர். அதனால் அவர் எல்லாவற்றிலும் சரியாக பார்த்துக் கொள்வார் என்று அந்த பேட்டியில் நடிகர் கருணாஸ் கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *