தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் ரீச்சாகிடும். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஷோக்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.இவ்வாறுஇருக்கையில்பிக் பாஸ் சென்றபோது பிரியங்காவின் பெயர் சற்று டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பின்னர் மீண்டும் தொகுப்பாளராக விஜய் டிவி ரசிகர்களை ஈர்த்துவிட்டார் பிரியங்கா.இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் மலேஷியா சென்று உள்ளார். ‘மலேசிய மக்கள் காட்டிய அன்பால் நெகிழ்ந்து போனேன்.
அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? எதற்காக அவர்கள் என்மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்? என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே தவறு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் எனக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தது மலேசிய மக்கள் தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.அத்தோடு என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தது, என்னை பார்த்ததும் கையசைத்தது,
எனக்கு வாழ்த்து தெரிவித்தது ஆகிவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். மலேசிய மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் சென்றதே தவறு என யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் இப்படி அன்பு காட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது என பிரியங்கா மேலும் தெரிவித்தார்.மேலும் இதை கூறும்போது அவர் கண்கலங்கி பேசி இருக்கிறார். வீடியோவில் நீங்களே பாருங்க.