60 வயதில் அந்த ஆடையில் பாத்திமா பாபு …! ஃபோட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்…! இந்த வயதில் இது தேவையா என திட்டிதிர்க்கும் நொட்டிசன்கள்..!

பாத்திமா பாபு சிறிய உடையை அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.இவர் தமிழ் திரையுலகில் டி.டி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். இத்துறையில் பிரபலமான இவர், இதன் பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். திரைப்படங்களில் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள இவர், பல திரைப்படங்களுக்கு பின்னர் தொலைக்காட்சி தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.மலையாள குடும்பத்தை சேர்ந்த இவர், 1968-ல் தமிழகத்தில் உள்ள புதுச்சேரியில் பிறந்துள்ளார்.

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான இவர், 1996-ம் ஆண்டு கல்கி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர். பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2004-ம் ஆண்டு மலையாள தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் தமிழில் 2006-ம் ஆண்டு லட்சுமி என்ற சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து தமிழ் திரையுலகிலும் நாடக தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது 2017-ம் ஆண்டு முதல் இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவர் 2019-ஆம் ஆண்டு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார். பாத்திமா பாபு செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் பாத்திமா பாபு. தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், டிவி சீரியல்கள், நாடக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பாத்திமா பாபு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார்.

அதன்பின், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். வைரல் ஃபோட்டோ அதில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில், ஒரு ஷார்ட் உடை அணிந்து கொண்டு போட்டோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகிறார்கள்.இவர் யோகா, உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் யோகா தினத்தின் போது சில யோகா போஸ்களை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *