பெண்களின் அந்த அங்கத்தை அப்படிதான் சொல்லனும்…! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர்…!

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதில் அவர், தற்போது சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன்..உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ.‘‘பிக்பாஸ் அடுத்த சீசனில் நான் வருவதாக பேசப்படுகிறது. எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை. கடந்த சீசனிலேயே இந்த பேச்சு இருந்தது. சித்து பற்றி பேசிய ரேகா நாயர் வருகிறார் என்றார்கள். இப்போது பயில்வானை அடித்த ரேகா நாயர் வருகிறார் என்கிறார்கள்.

நான் கன்டண்ட்டா இருக்கேன், அதனால் என் பெயரை இழுக்கிறார்கள். இன்று வரைக்கும் என்னுடைய வாட்ஸ் ஆப்பில் பிக்பாஸில் நான் வருவதாக, வாழ்த்துக்கள் வருகிறது. நான் யாருக்கும் ரிப்ளை பண்ணல. என்னிடம் அவர்களாகவே வந்து கேட்டாலும், நான் பிக்பாஸ் போக மாட்டேன். அங்கே போய் நான் என்ன செய்யப்போகிறேன்? நான் நானா இருக்க விரும்புறேன். நீங்க கொடுக்குற ஸ்கிரிப்டை நடிக்கிறதுக்கு, ஒரிஜினல் ஸ்கிரிப்டுக்கு சினிமாவில் நடித்து விடலாம். இயக்குனர் சொல்லும் கதையில் நடித்து விடலாம்.

100 நாள் அங்கே போய் உட்கார்ந்து நடிக்க விருப்பமில்லை, என்னை யாரும் அழைக்கவும் இல்லை. ரேகா வாயை திறந்தாலே கன்டண்ட். அப்புறம் எதுக்கு பிக்பாஸ் போய் தனியா கன்டண்ட் ஆகனும்?நான் ஏதாவது காதல் கவிதையோ, காம கவிதையோ எழுதினால், எப்போதும் இப்படியே தான் இருப்பியா? என்று கேட்கிறார்கள். யாராவது ரேகா நாயகர் என்று எழுதினால், ‘எப்போதும் ஜாதி பெயர் உடன் தான் இருப்பியா?’ என்று கேட்கிறார்கள். யாரோ ஒருவர் என் பெயருக்கு பின்னால் வைத்த பெயருக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறியிருந்தார். இந்நிலையில், மேலும் ஒரு பேட்டியொன்றில் பெண்களின் மார்பகத்தை அந்த வார்த்தை சொல்லி தான் அழைக்க வேண்டும் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *