பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போ எங்கு இருக்கிறார் தெரியுமா…? இவருக்கு இப்படியொரு பிரச்சினையிருக்கா…?

தமிழ் சினிமாவில் தவிர்க்க 80களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் காமெடி நடிகர் தான் ஜனகராஜ். அவர் ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் தான் ஜனகராஜ். இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர்.ஜனகராஜ் ஒரு அற்புதமான நகைச்சுவை கலைஞர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் காமெடியனாக பல திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார் ஜனகராஜ்.

இந்த நிலையில் ஜனகராஜ் ஒரு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்தும் அதனால் ஒரு பிரபல காமெடி நடிகருக்கு வந்த அரிய வாய்ப்பு குறித்தும் இப்போது பார்க்கலாம்.கவியரசர் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் “அலேக் மருது” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் ராம்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அதே போல் இத்திரைப்படத்தில் ராம்கிக்கு இணையான ஒரு கதாப்பாத்திரமாக ஜனகராஜ் நடிப்பதாக இருந்தது.ஆனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், ஒரு நாள் ஜனகராஜ், தனது ஸ்கூட்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுவிட்டது.

அவர் முகம் முழுவதும் காயங்களால் நிறைந்திருந்தன. ஆதலால் அந்த கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒருவரை தேர்வு செய்யலாம் என முடிவெடுத்தனர். அதன்படி கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகரை அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என யோசனை பிறந்தது. அதன் பின் அந்த நடிகரை அத்திரைப்படத்தில் நடிக்க வைத்தனர். அவர்தான் பின்னாளில் மக்களின் கலைஞனாக திகழ்ந்த சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்ட காமெடி நடிகர் விவேக். ஜனகராஜ் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் முதல் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் டிரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.தற்போது இவர் தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். கடைசியாக ஜனகராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *