நடிகை சங்கீதாவுடன் காதல்…! விஜய் – சங்கீதா திருமண விசயத்தில் இப்படியொரு ரகசியமா…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். லியோ படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், அரசியல் நுழைவு பற்றியும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், சில சர்ச்சையான வதந்தி செய்திகளும் விஜய் பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வந்தனர். விஜய் மனைவி சங்கீதா பிரிந்துவிட்டார் என்றும் லண்டனுக்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்று மாவீரன் படத்தினை பார்க்க தியேட்டருக்கு வந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சங்கீதா. சங்கீதா – விஜய்யின் காதல் இந்நிலையில் சங்கீதா – விஜய்யின் காதல் குறித்த சில தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் 1996ல் வெளியான படம் பூவே உனக்காக. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகளவில் உருவாகியது. குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகரிக்கத் துவங்கிய சமயம். பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதா தான் விஜய்யை காதலிக்கிறார் என்று செய்திகள் பரவியது. ஆனால் அது நடிகை சங்கீதா இல்லை என்றும் அது வேறொரு சங்கீதா என்றும் தெரியவந்துள்ளது.அப்போது விஜய்யின் தீவிர ரசிகையாக மாறியிருக்கிறார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாழ் தொழிலதிபர் சொர்ணலிங்கமின் மகள் சங்கீதா.

பூவே உனக்காக படத்தை பார்த்து விஜய்யை எப்படியாவது சந்திக்க தமிழ் நாடு பக்கம் வந்துள்ளார். நேரில் சந்திக்க விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார் சங்கீதா. தீவிர ரசிகை ஒருவர் சந்திக்க வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். தகவல் தெரிந்து சங்கீதாவை அழைத்து பேசியிருக்கிறார்.ஆனால், தமிழ் நாட்டிற்கு வரும் முன்பே விஜய்யுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் சங்கீதா.

விஜய் அழைத்ததால் தான் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், முதல் சந்திப்பிலேயே சங்கீதாவை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் விஜய். பின் லண்டன் சென்றப்பின் மீண்டும் வந்த சங்கீதா பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு கிறிஸ்தவ முறைப்படி விஜய் திருமணம் செய்து கொண்டார். ஒருசிலருக்கு மட்டுமே விஜய் – சங்கீதா திருமணம் காதல் திருமணம் என்று தெரியும். ஆனால் பலருக்கு குடும்பத்தினர் பார்த்து நடத்தி வைத்த திருமணம் என்று தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *