நடிகையுடன் மேடையிலேயே எல்லைமீறி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா…! வீடியோவை பார்த்து பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் குஷி படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்துள்ளார். சிவா நிர்வனா இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கேடகர், முரளி சர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்குவரவிருக்கிறது.

மகாநதி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா , விஜயதேவரகொண்டா ஜோடி தற்போது மீண்டு குஷி படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் ஜோடி மகாநதி படத்தில் அனைவரையும் கவர்ந்த நிலையில், குஷி படத்தில் இவர்களின் ஜோடிக்கு எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் குஷி படத்தின் ‘என் ரோஜா நீயே’ எனும் முதல் பாடல் மற்றும் ‘ஆராத்யா’ ஆகிய பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.வரும் செப்டம்பர் 1-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், குஷி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

விழாவில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், அனுராக் குல்கர்னி, சின்மயி, ஹரி சரண், திவ்யா எஸ் மேனன், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஹரி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது மேடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கின்றனர். மேலும் சமந்தாவை விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி இருக்கும் போட்டோக்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *