போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கின. தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தன்னை வைத்துக்கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி, சமூகம் சார்ந்த விஷயங்களையும், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களையும் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கி யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram