அட நம்ம வையாபுரிக்கு இவ்வளவு அழகான பொண்ணு இருக்கா…? பார்க்க நடிகை போல இருக்காங்களே…!

நகைச்சுவை நடிகர் வையாபுரி மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 90கள் காலப்பகுதியில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் தான் வையாபுரி. தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வையாபுரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது. தொண்ணூறுகளின் இறுதி கால கட்டங்களில் வெளிவந்த அனைத்து படங்களிலும் வையாபுரி நடித்திருப்பார். இவருடன் சேர்ந்து தாமு, சார்லி என ஒரு நகைச்சுவை கூட்டமே இருந்தது. பெரும்பாலும் இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்து வந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வையாபுரிக்கு கொஞ்சம் நெகடிவ் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொது இடங்களில் வையாபுரி தான் ஒரு நட்சத்திரம் என்ற அடையாளத்தை அடிக்கடி காட்டிக் கொள்வார் எனவும் பலர் கூடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவரை சார்ந்தவர்கள் அவர் அப்படி இல்லை எனக் கூறுகின்றனர். இவர் விஜய், அஜித், ரஜினி என முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகருடனும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் வையாபுரியின் பெயர் ராமகிருஷ்ணன் என்று தான் இருந்துள்ளது.

இந்த நிலையில் கோலிவுட்டில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் குடும்பமாக சேர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் “ வையாபுரிக்கு  இவ்வளவு அழகான பெண்ணா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *