நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.இதனிடையே ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதில் அவர் நிர்வாணமாக காட்சியளிக்கிறார். ஆனால் அவரே அப்படி ஏன் தனிப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்? அது தற்செயலாகப் பகிரப்பட்டதா? என்பது கூட தெரியவில்லை.
அதில், “சாந்தனு நீ என் சிறந்த நண்பன். நான் பெற்ற சிறந்த காதல். நீ என் வைரம் நீயே என் ஒளி.. நீயே என் நட்சத்திரம். எந்த சூழ்நிலையிலும் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ருதி ஹாசன் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், வால்தெரு வீரையா, வீர சிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து நல்ல அங்கீகாரத்தைப் பெற்றார். இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.
இதனால் ஸ்ருதி ஹாசனின் மார்க்கெட் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் இவர் மறுபுறம் சீனியர் ஹீரோக்களுடன் படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்திலும் நடிக்கிறார் என பேச்சு அடிபடுகிறது. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார்.