அசல் கோளாறுவுடன் கைக்கோர்க்கும் இலங்கை பிரபலம்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்…!

பிக்பாஸ் ஜனனி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜனனி கலந்துக்கொள்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்றால் அது ஜனனிக்கு மட்டும் தான். , அசல் கோளாறுவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி. இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யார் இந்த ஜனனி ? இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி ஆவார். இவர் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இலங்கையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஜனனி தொகுத்து வழங்கி வருகிறார்.ஜனனிக்கு 23 வயதாகிறது. மாடலிங் துறையிலும் இருப்பதால் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஜனனியின் முழுப்பெயர் ஜனனி குணசீலன். இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ரசிகர்கள் தேடிபிடித்து ஃபாலோ செய்து வருகின்றனர். இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இந்த நிலையில் படங்கள், பாடல்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில்

ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் ஜனனி உட்பட பெண் போட்டியாளர்கள் பலரிடம் தவறாக நடந்து கொண்டு வெளியாகிய அசல் கோளாறுவுடன் ஜனனி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் எங்கு சென்றிருப்பார்கள் என சந்தேகத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். அத்துடன் ஜனனி மீண்டும் அசல் கோளாறுவுடன் இணைந்து ஆல்பம் பாடல் எதுவும் செய்து வருகிறாரோ தெரியவில்லை. மேலும் ரசிகர்கள், இது குறித்து கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *