ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல இயக்குனருக்கு மாரடைப்பு…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! தற்போது அவருடைய நிலைமை …!

Spread the love

பிரபல இயக்குனர் நாகா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும், த்ரில்லர் மற்றும் திகில் நிறைந்த அற்புதமான படைப்புக்களை சீரியல்களாகவும், திரைப்படமாகவும் இயக்கி ரசிகர்களின் மனதில் நின்றவர் இயக்குனர் நாகா. இவர் இயக்கிய சீரியல்கள் பல, காலத்தாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத சில அற்புதமான படைப்புகளாகும்.

குறிப்பாக சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, மர்ம தேசம், ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன், போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார். மேலும் வெள்ளித்திரையில் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் நந்தா மற்றும் சாயாசிங் நடிப்பில் வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி, சில திரைப்படங்களில் சினிமேட்டோகிராபராகவும் பணியாற்றி உள்ளார்.

தற்போது இவர் பிரபல ஓ டி டி தளம் ஒன்றிற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸிங் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சரிந்து விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து பட குழுவினர் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து இயக்குனர் நாகாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சைகள் அளித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *