“வா மச்சான்… வா மச்சான்..” – தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய யோகி பாபு …! ‘வேற லெவல்’ என பாராட்டும் ரசிகர்கள் …! ரசிகர்களை கவர்ந்த வைரல் வீடியோ இதோ..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சினிமா உலகில் ரசிகர்களின் பேவரட் காமெடி நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் யோகி பாபு. இவர் தற்போது வருடத்திற்கு ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக கமிட்டாகி நடித்து வருகிறார் இதுபோக ஹீரோவாகவும் சில படங்களில் யோகி பாபு கலக்கி வருகிறார் என்பதும் உண்மை. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமே யோகி பாபு கையில் பல முக்கிய படங்கள் இருக்கின்றன.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயாலன், மாவீரன் போன்ற இரு முக்கிய படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். மேலும் அரண்மனை 2, சதுரங்க வேட்டை 2, டக்கர் போன்ற பல படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகி வரும் முதல் படமான “லெட்ஸ் கெட் மேரீட்” என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

இப்படி தமிழில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக திகழ்ந்து வரும் யோகி பாபு பான் இந்திய அளவிலும் பிரபலம் அடைந்து காணப்படுகிறார். அப்படி ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த படம் அவருக்கு ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தரக்கூடிய படம் ஆகும். இந்நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யோகி பாபு ரசிகர்களை மகிழ்விக்க புகைப்படங்கள்.. மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடியும் வருபவர்.

அப்படி தற்போது யோகி பாபு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகின்றன.. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க. அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது பிரபல கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக உருவாகும்

‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்னும் திரைப்படத்திலும் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் ஒரு சில பான் இந்தியா திரைப்படங்களிலும் நடித்துவரும் யோகி பாபு எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *