புது ஜோடிக்கு கடைசி இரவான முதலிரவு..! பெட்ரூம் இப்படி இருந்ததால் இருவரும் பலியா..?

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலிரவுக்கு சென்ற திருமண ஜோடி, சடலமாக மீட்கப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் பராச் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் பிரதீப் யாதவுக்கும், அப்பகுதியை சேர்ந்த 20 வயது பெண் புஷ்பாவுக்கும் பெரியவர்களால்  நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. 30 ஆம் தேதி திருமணம் நடந்ததை தொடர்ந்து இருவீட்டார் விருந்து நிகழ்ச்சி, சடங்குகள் முடிந்ததும் ஒன்றாம் தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவு பிரதீப்பும், புஷ்பாவும் தனியறைக்கு சென்ற நிலையில் உறவினர்கள் அனைவரும் மற்றொரு அறையில் தூங்கியிருக்கிறார்கள். வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் மாப்பிள்ளையும், மணமகளும் வெளியே வராத நிலையில், உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். உள்ளிருந்து எந்த சத்தமும் கேட்காத நிலையில் போலீசுக்கு தகவல் தெரிவித்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இருவரும் உணர்வற்று இருந்த நிலையில் பதற்றமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் இருவரும் மாரடைப்பால் இறந்துள்ளனர் என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இளம் ஜோடி உடலில் எந்த காயமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கி அறையில் போதிய காற்று வசதி இருக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், இளம் ஜோடியின் உடல்கள் ஒன்றாக தகனம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *