படப்பிடிப்பின் போது ஹீரோயினை அப்படி சாப்பிட சொன்ன இயக்குனர்…! ஓப்பனாக பேசிய நடிகை…!

பிரபல இயக்குனர் படப்பிடிப்பில் ஹீரோயினை நக்கி சாப்பிட சொன்னதாக அவரே வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குனர் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று பெயரெடுத்தவர் கே.பாலச்சந்தர். இவர் நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, கமல், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களில் படங்களை இயக்கியுள்ளார். அபூர்வ ரங்கங்கள் என்ற படத்தின் மூலம் ரஜினியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

ந டிகை ஓபன் டாக் இந்நிலையில், இவரது புது புது அர்த்தங்கள் என்ற படத்தில் நடித்து அறிமுகமான நடிகை கீதா, இயக்குனர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இவர் புது புது அர்த்தங்கள் என்ற படத்தில் நடிகர் ரஹ்மான் உடன் நடித்தார், அந்த படத்தில் கீதாவும் ரஹ்மானும் சாப்பிட போகும்போது இருவருக்கும் சண்டை ஏற்படும். அப்பொழுது கீதா என்ன பேசுவது என்று தெரியாமல் சாசை ஊற்றிவிடுவார். அதன்பிறகு அதனை அவரே துடைத்து முத்தம் கொடுப்பார்.

படத்தின் கதையில் இந்த காட்சிகள் இல்லை என்றும், இவர் அந்த சமயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் சாசை ஊற்றிவிட்டதாக கூறினார். இதனை இயக்குனர் பாலச்சந்தர் “இது நல்லாருக்கே, நீ ஒன்னு பண்ணு அந்த சாசை அப்படியே நாக்கால் நக்கிவிடு அப்போதுதான் கணவனை சமாதானம் செய்வது போல் இருக்கும்” என்று சொன்னார். “ஒரு ஃபர்மான்ஸ்காக செய்தது கடைசியில் நமக்கே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து அதை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *