“நான் காட்டுறேன்.. நீங்க பாக்குறீங்களா…!” தொகுப்பாளர் கேட்ட ஒரே ஒரு கேள்வி…! சீரிய நடிகை சினேகா…!

நடிகை சினேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளரை பங்கம் செய்த சம்பவம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நடிகை சினேகா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் இடையில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார்.மட்டுமில்லாமல் அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார். ஒரு பக்கம் குடும்ப வாழ்க்கை மறுபக்கம் சினிமா என இரண்டையும் சரிசமமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி வந்து கலந்து கொண்ட சினேகாவிடம் தொகுப்பாளர் இப்போது உள்ள ஹீரோக்களுக்கு நீங்கள் அக்கா போல இருக்கிறீர்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டதும் கடுமையாக கோபப்பட்டார் நடிகை சினேகா. நீங்கள் எந்த நடிகருக்கு அக்கா மாதிரி இருக்கிறேன் என்று கூறுகிறீர்கள் என்று மறு கேள்வி எழுப்பினார்.நான் இன்னமும் இளமையோடு தான் இருக்கிறேன்.. உடல் எடை குறைத்திருக்கிறேன்.. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்படி நான் அக்கா போல காட்சி அளிக்கிறேன் என்று நீங்கள் கூறலாம்..?

என சண்டைக்கு சென்றார்.இப்போது உள்ள நடிகர்கள் ஆர்யா, ஜீவா, ஜெய், சிவகார்த்திகேயன் உள்ள நடிகர்களுக்கு நீங்கள் அக்கா போல தான் இருக்கிறீர்கள். அதைத்தான் நான் கேட்டேன் என்று கூறினார் தொகுப்பாளர். அதற்கு பதிலளித்த நடிகை சினேகா, அப்படி எல்லாம் கிடையாது..! அந்தந்த காலகட்டத்தில் இருந்த இளம் நடிகர்களுடன் நடித்திருக்கிறேன் இன்னும் சொல்லப்போனால் நடிகர் ஷாம்-ற்கு நான் ஜோடியாக நடித்திருக்கிறேன்.அதற்கு என்ன சொல்வீர்கள்…? தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருக்கிறேன்..

அதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஒருமுறை தனுஷிடம் பேட்டி எடுக்கும் பொழுது யார் உங்களுக்கு சிறந்த ஜோடியாக இருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு சினேகா தான் தனுஷுக்கு சரியான ஜோடி என்று ரசிகர்கள் பலரும் அந்த இடத்தில் கூறியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை காட்டுறேன்.. நீங்க பாக்குறீங்களா..? நான் யாருக்கும் அக்கா போல இல்லை. இப்போது நான் ஹீரோயினாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சினேகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *