சிம்புவுடன் வெளிப்படையாக இருந்த தொடர்பு..!! திருமணத்திற்கு பின் கணவர் முன்பே உடைத்த நடிகை ஹன்சிகா..!!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அப்படத்தினை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, நடிகர் சிம்புவுடன் இரு ஆண்டுகள் காதல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து தனித்தனியாக சென்றுவிட்டனர். அதற்கு காரணம் திருமணத்திற்கு பின் ஹன்சிகா

நடிக்கக்கூடாது என்று இருத்தரப்பினரும் கூறியதால் தானாம். இந்நிலையில் உடல் எடையை ஏற்றி சில காலம் தமிழில் நடிக்கமுடியாமல் இருந்த ஹன்சிகா மீண்டும் உடல் எடையை குறைத்து 50வது படமான மஹா படத்திற்கு பின்னும் நடித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தன்னுடைய தோழியை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று பிரிந்த முன்னாள் கணவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்டமாக அரண்மனையில் நடைபெற்ற திருமணத்தை ஓடிடி தளத்தில் வீடியோவாக 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் அந்த வீடியோவின் பிரமோவில், கணவர் சோஹைலை வைத்துக்கொண்டு நான் சினிமாவில் நடித்த போது பொதுமக்களின் பார்வையில் ஏற்கனவே ஒருவருடன் உறவில் இருந்தேன் என்றும் அதை நான் மீண்டும் செய்ய விரும்பவில்லை.

ஆனால் அது எனக்கு திடீரென நிகழ்ந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் மீண்டும் ஊர் அறிய ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது நான் திருமணம் செய்யப்போகும் நபராக இருக்க வேண்டும் என்று நினைத்து உறுதியாக இருந்தேன். அது தற்போது நடந்துள்ளது என்று உருக்கமாக கூறியுள்ளார் ஹன்சிகா.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *