சாலையில் நின்று உடைமாற்றிய நடிகை மீனா….! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்…!

பிரபல நடிகர் ராஜ்கிரண் நடிகை மீனா குறித்து வெளிப்படையாக பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகின்றது. நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. மீனாவைக் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறுகையில், நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீனாவின் டெடிகேசனை தற்போதுள்ள நடிகைகளிடம் பார்க்க முடியாது.

ஒருமுறை பாடல் காட்சி ஒன்றிற்கு உடை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது எதையும் யோசிக்காத மீனா கார் மறைவில் நின்று கொண்டு உடையை மாற்றினார்.90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் அவரோடு நடித்த நடிகர் ராஜ்கிரண் மீனா பற்றி பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.

மீனா முதல் முதலாக 1991 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானது என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது மீனாவுக்கு 15 இல்லனா 16 வயது தான் இருக்குமாம். இந்த படத்தை இயக்குனர் கஸ்தூரி இயக்கி இருக்கிறார். அதுவரைக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா முதல் திரைப்படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போலவும் நடித்திருந்தார்.இந்த படத்துல நடிக்கும் போது சின்ன வயசா இருக்கே எப்படி கர்ப்பமா இருக்குற மாதிரி நடிக்குது என்று யோசிக்காமல் மீனா அதை நடித்து முடித்து இருக்கிறார்.

இதைப்பற்றி ராஜ்கிரண் பேசும்போது படத்தில் மட்டும் தான் மீனா என்ன பார்த்து பயந்ததா எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா நிஜத்திலயும் மீனா என்ன பார்த்து ரொம்பவே பயந்தாங்க. படம்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்து அவர் என்கிட்ட பேசவே இல்ல.அதுபோல நடிப்புன்னு வந்துட்டா கால நேரம் எல்லாம் மீனா பார்க்க மாட்டாங்க. எந்த சூழ்நிலையா இருந்தாலும் நடிக்க தயாராகிடுவாங்க. அப்போ இப்ப மாதிரி எல்லாம் கேரவன் போன்ற வண்டிகள் எல்லாம் கிடையாது. அதனால் ஏற்பட்ட அனுபவமும் எனக்கு வியப்பா இருந்துச்சு.

என்னன்னா ஒருமுறை பாடல் காட்சிக்காக வேகமாக ஆடை மாற்ற வேண்டி இருந்துச்சு.உடனே மீனா ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவில் நின்று ஆடையை மாத்திட்டு வந்துட்டாங்க. இப்ப உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம எதிர்பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று மீனாவை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.  மேலும் தன்னை சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்தில் பார்த்தாலும் மீனா பயப்படுவார் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார். இவர் மீனாவைக் குறித்து வெளியிட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *