கணவருக்கு பாத பூஜை செய்த சகுனி பட ஹீரோயின்…! ட்ரோல் பண்ணிக்கோங்க கவலை இல்லை…! ஓபனாக கூறிய பிரபல நடிகை …!

தன் கணவருக்கு பாத பூஜை செய்வதை விமர்சிப்பவர்கள் பற்றி தனக்கு கவலையில்லை என்று நடிகை பிரணிதா தற்போது சமூக வலைத்தளங்களில் கூறியிருக்கிறார். தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை பிரணிதா. இவர் அருள்நிதியுடன் இணைந்து உதயன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு தோல்வியை கொடுத்தது. பின்னர் கார்த்திக் உடன் இணைந்து சகுனி படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு திறப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கவே, பின்னர் சூர்யாவுடன் இணைந்து மாசு படத்தில் நடித்தார். பின்னர் பெரிய அளவில் எந்த படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நடிகை பிரணிதா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் கொரோனா காரணமாக நண்பர்கள் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினரை மட்டும் வைத்து அவர் திருமணத்தை நடத்தி இருந்தார். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. இந்த நிலையில் பிரணிதா அடிக்கடி தனது கணவருக்கு பாத பூஜை செய்வது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கடந்த வருடம் பீமனா அமாவாசை என்னும் நாளில் கணவரின் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டிய பெண்கள் செய்யும் பூஜை, அன்று தனது கணவருக்காக இதை செய்திருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். அவரின் அந்த புகைப்படம் வைரலானது.

பலரும் பிரணிதாவை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வருடமும் அமாவாசையான இன்று அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.கடந்த வருடம் வெளியிட்ட புகைப்படங்கள் கடுமையான சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது இந்த வருடமும் புகைப்படங்களை பகிர்ந்து நீண்ட பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் பீமனா அமாவாசையை முன்னிட்டு இந்த பூஜையை நிகழ்த்தி இருக்கிறேன், இது ஒரு ஆணாதிக்க நிகழ்ச்சியாக இருக்கலாம், மீம்ஸ் பக்கங்கள் தன்னை இவ்வாறு விமர்சிக்கின்றன.

ஆனால் இது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்கு ஒரு கதை உள்ளது. இந்து சமய சடங்குகள் ஆணாதிக்கமானது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனெனில் தெய்வங்களை சமமாக வழிபடும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று பகிர்ந்திருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவும் பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.!

 

View this post on Instagram

 

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *