தனது நிர்வாண படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என தயாரிப்பாளர் மிரட்டியதாக பிரபல நடிகை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில், ‘ஷிப்பூர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சர்க்காரிடம் இருந்து தனக்கு பாலியல் அழைப்புகள் வந்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார். சர்கார் சார்பாக ரவீஷ் ஷர்மா என்ற நபரிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்ததாகவும் படத்தை ப்ரொமோஷன் செய்யவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாகக் கூறியுள்ளார். மேலும் தனது மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் ஒத்துழைக்காவிட்டால் அவற்றை ஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்றும் அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இது பெங்காலி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வஸ்திகா முகர்ஜி 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற படம் மூலம் ஸ்வஸ்திகா முகர்ஜி நடிகையாக அறிமுகமானார் பெங்காலி மற்றும் இந்தி மொழிபடங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார், பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது ஷிபுர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் வாங்கி கொடுத்தது நான்தான். எனவே என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள் என்று சந்தீப் சர்கார் தொல்லை கொடுக்கிறார். சைக்கு உடன்படவில்லை என்றால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார் எனக் கூறியுள்ளார், அவரின் இந்த தகவல் பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.