அந்த இடத்தில் குட்டி டாட்டூ போட்டு கவர்ச்சி காட்டிய நடிகை அனுபமா…! தீயாய் பரவி வரும் புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!

பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் புதிதாக டாட்டூ போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தாலும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தியமையால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனுபவா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதில் நெஞ்சுக்குழியில் டாட்டூ போட்டுக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், ஏற்கனவே வலப்புற மார்பில் இவர் டாட்டூ போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளம்தலைமுறையினருக்கு டாட்டூ போட்டுக் கொள்வது பிடித்தமான ஒன்று என்றாலும் அதனால் பக்கவிளைவுகளும் இருக்கின்றன. டாட்டூ போட்டுக் கொள்ளும் 10ல் ஒருவருக்கு அரிப்பு, வீக்கம், நோய்த்தொற்று போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டாட்டூ போட்டுக் கொள்ளும் ஊசி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா, டாட்டூ போடும் நபர் முறையான கையுறை அணிந்திருக்கிறாரா? அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா இடத்திலும் டாட்டூ குத்திக் கொள்வது ஆபத்தானதே, இதனால் மெல்லிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு நரம்பு சேதமடைவதால் விபரீதம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

உடல்நலக்குறைபாடுகள் இருப்பில் டாட்டூ போட்டுக் கொண்ட இடத்தில் உள்ள பிரச்சனைகள் தெரியாமல் போகலாம், சிலருக்கு தோல் புற்றுநோய் ஏற்படலாம். மிக முக்கியமாக ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்தும் போது எச்ஐவி, ஹெபடைட்டிஸ் பி, காசநோய், பால்வினை நோய் போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.சமூக வலைத்தளங்களில் எப்பவும் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் தற்போது தனது முன்னழகின் அருகே டாட்டூ போட்டு அதை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *