கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘தாரி’ என்ற சீரியல் மூலம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது ஸ்ரீநிதி ‘தெய்வம் தந்த பூவே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி, தன்னை நடிகையாக்க தனது அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்ததாக பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீநிதி. ‘கலர்ஸ்’ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘தறி’ என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து புகழ் பெற்றார் ஸ்ரீநிதி. இதைத் தொடர்ந்து விஜய் டிவியின் ‘செந்தூரப் பூவே’ என்ற தொடரிலும், விஜய் டிவியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இருந்தார்.
தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரையுலகத்திற்குள் காலம் காலமாக இருந்து வரும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் ஸ்ரீநிதி, “நான் என்னுடைய சிறு வயதிலேயே இந்த ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ என்ற பிரச்சினையை சந்தித்து உள்ளேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு படத்தில், நடிக்க இருந்தபோது அந்தப் படத்தில் நடித்த ஒரு பிரபலமானவருடன் அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா? என்று கேட்டார்கள். எனக்கு அப்போது ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்றால் என்னவென்று புரியவில்லை. “மகள் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால்கூட பரவாயில்லை. அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும்..” என்று சொன்னார்கள்.
இது என் அம்மாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது..” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீநிதி சினிமாவில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. நான் 10 வகுப்பு படித்து வந்த போது ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது பட தரப்பில் இருந்து எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதுக்கு நான் நோ சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள், நீங்க வரலான பரவால அம்மா வந்த கூட ஓகே தான் என்று சொன்னாங்க. இதை கேட்டவுடன் அம்மா மிகவும் சோகமடைந்தார் என்று ஸ்ரீநிதி கூறியுள்ளார்.