யாருடா இந்த போட்டியெல்லாம் கண்டுபிடிக்குறது? கிராமத்து திருவிழாவில் தம்பதிகளுக்கு இடையில் நடந்த வித்தியாசமான போட்டியை பாருங்க..!

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அவர், அவர் கிராமம் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் கிராமத்தில் இருப்பதே வரம் என்ற் சொல்லிவிடலாம். அவர்கள்தான் வித்தியாச வித்தியாசமான போட்டிகளிலும் அசத்துவார்கள். ‘விளையாட்டு’ தான் நம்மை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது. ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால் இந்த கிராமத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து நடத்திய ஒரு போட்டி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.

அப்படி என்ன போட்டி நடந்தது என்கிறீர்களா? பெண்கள் அனைவரும் இதில் பங்கெடுக்கிறார்கள். மொத்தம் இரண்டே செங்கல் தான். ஆனால் செங்கல் மீது கால்வைத்துக்கொண்டே மொத்தத் தூரத்தையும் கடக்க வேண்டும். இதில் மனைவிகள் செங்கல் மீது நடக்க, கணவர்களோ ஒரு செங்கலில் இருந்து அவர் கால் எடுத்ததும், அந்த செங்கலை எடுத்து அடுத்த ஸ்டெப் வைக்க வைக்கிறார்கள். இதில் யார் முதலில் மொத்தத் தூரத்தையும் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். இதோ நீங்களே இந்தப் போட்டியைப் பாருங்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *