தமிழ்த்திரையுலகில் ஹீரோக்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களின் காலம் அப்படியானது அல்ல. தளபதி, விஜய் அஜித்திற்கு ஜோடியாக நடித்த சிம்ரன், ரம்பாவெல்லாம் இப்போது ஆண்டி ஆகிவிட்டார்கள்.
சினிமா உலகைப் பொறுத்தவர ஹீரோயின்கள் குறிப்பிட்ட காலம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். அந்தவகையில் முத்துக்கு முத்தாக படத்தில் நடித்த மோனிகாவும் மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனார். தொடர்ந்து இவர் பகவதி, இனிது இனிது காதல் இனிது, சண்டைக்கோழி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, சிலந்தி என பல படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்துவிட்டு ஷெட்டில் ஆகிவிட்டார்.
மோனிகா என்னும் பெயரில் இந்துக் குடும்பத்தில் பிறந்த அம்மணி, இப்போது இஸ்லாமிய மதத்திற்கு மாறி ரஹூமா எனத் தன் பெயரயும் மாற்றிக்கொண்டார். இவரது காதல் கணவரும் முஸ்லீம் தான். அவர் பெயர் மாலிக். கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த கையோடே சினிமாவுக்கு முழுக்கு போட்டார் மோனிகா.