பிக் பாஸ் 7 தமிழ் : சீசன் தொடங்கி இருக்கிறது. இதில் பல்வேறு போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்று இருக்கின்றனர். போட்டியாளர் விஷ்ணு வீட்டில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடிகை மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் நடிகர் விஷ்ணு நடிகை மாயாவுடன் தன்னுடைய கேப்டன் பதவி குறித்து உரையாடுகிறார். நான் அனைவரிடமும் கேட்டு விட்டேன். இந்த கேப்டன் பதவியை நானே இந்த வாரம் வைத்துக் கொள்கிறேன். அனைவரிடமும் பேசிய வாங்கி விட்டேன் என்று கூறினார். அதனை மறுத்த நடிகை மாயா பேசியே எளிமையாக கேப்டன் பதவியை பெற்று விட்டீர்களா..? அதற்கு எதற்கு உங்களுக்கு கேப்டன் பதவி.
என்னிடமும் பேசித்தான் இந்த கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ளப் போகிறீர்களா? ஏதேனும் சண்டை போட்டால் தான் அதில் ஒரு முடிவு தெரியும்.பேசி சண்டை போடுவது வேண்டாம் வேறு ஏதாவது சண்டை போட்டுக் கொள்ளலாம் விவாதம் எல்லாம் வேண்டாம் என்று பேசினார். அதனை தொடர்ந்து முதல் நாளே சண்டை வேண்டாம் நீங்களே கேப்டனாக இருந்து கொள்ளுங்கள் என்று விட்டுக் கொடுத்து விட்டார் நடிகை மாயா. அதனை தொடர்ந்து முதல் வாரம் கேப்டனாக நடிகர் விஷ்ணு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்த எந்த போட்டியாளரும் விஷ்ணுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. ஆனால் வந்த முதல் நாளே நடிகை மாயா தன்னுடைய வேலையை ஆரம்பித்து இருக்கிறார். மேலும் அறிமுக நேரத்தின் பொழுது நான் எந்த விஷயத்தையும் மறைத்து வைத்திருக்க மாட்டேன் வெளிப்படையாக பேசிவிடக்கூடிய ஒரு ஆள், இதுவே எனக்கு பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கமல்ஹாசனிடம் தெரிவித்திருந்தார் மாயா என்பது குறிப்பிடத்தக்கது.