பிக் பாஸ் போட்டியாளர்களின் இப்படியொரு டுவிஸ்டா…? லீக்காகிய தகவலை கண்டு ஷாக்கான ரசிகர்கள் …!

பிக் பாஸ் போட்டியாளர்களில் சில மாறுதல்கள் இந்த சீசனில் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார்.ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியில் எதிர்பாராத டுவிஸ்ட்டை பிரபல வைத்தது. ஆம் இதில் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் இந்த ஆண்டு சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வருகின்றார். இந்த 8வது சீசன் அக்டோபர் மாதம் 13ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இதற்கான பிரத்யேக ப்ரொமோ காட்சி இந்த வாரம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.போட்டியாளர்களில் மாற்றம் இந்த சீசன் ப்ரொமோ காட்சி வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி எப்படி இந்த சீசனை கையாளப்போகின்றார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

மேலும் மக்களிடம் கருத்து கேட்டு, இதை விஜய் சேதுபதியிடமே போட்டுக்காட்டி விளக்கம் கொடுக்கும்படியாக குறித்த ப்ரொமோ காட்சி படமாக்கப்படுகின்றதாம்.மேலும் கடந்த சீசனைப் போன்று இல்லாமல் பிரச்சனைகளை சரியாக கையாள வேண்டும் என்றும் மக்கள் அறிவுரை வழங்கியுள்ளார்களாம். மேலும் முந்தைய சீசன் போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறக்க உள்ளதாகவும், 2வது மற்றும் 3வது சீசன் சில போட்டியாளர்களுடன் புதிய போட்டியாளர்களும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *