நீங்க P**n படங்கள் பாப்பீங்களா…? என்ற கேள்விக்கு லவ் டுடே இவானா கொடுத்த பதிலை பாருங்களே…!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்ட லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த இவானாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இவானா என்கிற பெயரை விட நிகிதா என்கிற பெயர் தான் இவருக்கு பெருமை சேர்க்கிறது என்றே கூறலாம், அந்தளவுக்கு நிகிதா எனும் பெயர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்த நாச்சியார் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா. அதற்கு முன்னதாக மலையாளங்களில் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி பிறந்த இவானா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை இவானா லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இவானா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். VJ பார்வதி பேட்டியெடுக்க ஒவ்வொரு கேள்வியாக பதிலளித்து கொண்டிருந்தார் இவானா. பேசுகையில், லவ் டுடே படத்தில் இவ்வளவு P**n மூவிஸ் பாப்பியாடா..? என்று கதாநாயகனிடம் கேட்பீர்கள். இப்போ நான் உங்களிடம் கேட்கிறேன், நீங்கள் P**n மூவிஸ் பாப்பீங்களா..? என்று கேள்வி எழுப்பினார் VJ பார்வதி.

இந்த கேள்வியை கேட்ட இவானா அதிர்ச்சியில் உறைந்து போனார். இதற்கு பதிலளித்த அவர், நிறைய பேர் என்னிடம் அந்த படங்களை பற்றி கூறியுள்ளார். நீங்கள் நினைப்பது போல இருக்காது பாருங்கள் என கூறியுள்ளனர். ஆனால், எனக்கு அதன் மீது ஈடுபாடு வரவில்லை. நான் இப்போது சாதாரண படங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியா இருக்கிறது. அந்த படங்கள் அந்த பக்கம், நான் இந்த பக்கம் என பதில் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *