டிக் டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் இலக்கியா. அதில், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து எல்லை மீறிய தாறுமாறான கிளாமர் காட்டி இளம் ரசிகர்களை வளைத்துப்போட்டார் இலக்கியா. டிக் டாக் செயலியை தடை செய்த பிறகும், இன்ஸ்டாகிராம், பேஸ் புக்கில் கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.கவர்ச்சி ஆட்டம் போட்டு பிரபலமான இலக்கியா, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், படவாய்ப்பு தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்ததால், சினிமா வேண்டாம் என்று மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை போட்டு கணிசமான லைக்குகளை அள்ளி சம்பாதித்து வருகிறார். தற்போது, இலக்கியா யூடியூப் சேனல் ஒன்றில் நடிகை ஷகிலாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
டிக் டாக் இலக்கியா அதில், நான் எப்போதுமே தனியாகத்தான் இருப்பேன், நண்பர்கள் வருவார்கள் போவார்கள். தனியாக இருக்கும் போது பல விஷயத்தை நினைத்து கவலைப்பட்டு அழுது இருக்கிறேன். ஆனால், நான் கடந்து வந்த வாழ்க்கை பல விஷயத்தை எனக்கு சொல்லி கொடுத்துவிட்டதால், இப்போது எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் மனநிலை எனக்கு வந்துவிட்டது. இப்போது பெரியதாக எதற்கும் அழுவதில்லை, கவலைப்படுவதில்லை. எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். குக்கிங் சேனல்
மேலும், ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து இருக்கிறேன், ஆனால், அது தோல்வியாகிவிட்டதால், போதும்டா சாமி இருப்பதை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். இப்போது, ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இப்போது, புதியதாக குக்கிங் சேனலை தொடங்கி இருக்கிறேன் அதற்கு மக்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் 8 வயதில் இருந்து சமையல் செய்து வருகிறேன். இதனால், சமையல் செய்வது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம்.பத்தினியா இதனால், இனி கவர்ச்சி காட்டாமல், இப்படியே மாறிவிடலாம் என்று இப்போது கவர்ச்சி வீடியோக்களை போடுவதில்லை.
இதற்கும் சில பேர் இனிமே காட்ட மாட்டியா? என்றும் பத்தினியா மாறிட்டியா? சும்மா பத்தினி வேஷம் போடாதே என்று கமெண்ட் போடுகிறார்கள், கவர்ச்சியா வீடியோ போட்டாலும் திட்டுறாங்க, சமையல் வீடியோ போட்டாலும் திட்டுறாங்க என்று மனம் நொந்து பேசிய இலக்கியா. என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் பற்றி இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. முதல் காதல் பிரேக் அப் ஆனதும் யார் மீது நம்பிக்கை வரல, மீண்டும் என் வாழ்க்கையில் நல்ல மனிதர் வந்தால், அது கல்யாணம் வரை சென்றால், அது பற்றி யோசிப்பேன் இல்லை என்றால் இப்படியே இருந்து விடுவேன் என்று இலக்கியா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.