நடிகை முத்தம் கொடுக்க…! அதுவும் இத்தனை லட்சம் சம்பளமா…? நெருக்கமாக நடிக்க எத்தனை கோடி சம்பளம் தெரியுமா…? ஷாக்கான ரசிகர்கள்…!

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ரௌடி பாய்ஸ். இந்த திரைப்படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், ஒரு முத்தக்காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.அனுபமா பரமேஸ்வரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமா தமிழில் கொடி படத்தில் நடித்திருந்தார். மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி, தள்ளிப் போகாதே’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே,

ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது.சமீபத்தில், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘ரௌடி பாய்ஸ்’. இந்த படத்தில் ஹீரோவாக ஆஷிஸ் ரெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனுக்கு ஹீரோ லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *